உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விழும் நிலையில் பட்டுப்போன மரம்வெட்டி அப்புறப்படுத்தப்படுமா?

விழும் நிலையில் பட்டுப்போன மரம்வெட்டி அப்புறப்படுத்தப்படுமா?

கரூர், :தவிட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளி அருகே, பட்டுப்போய் உள்ள மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளி அருகே, அக்ரஹாரம் செல்லும் பாதையில் பல ஆண்டுகளாக அரச மரம் உள்ளது. தற்போது பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இங்கு, காய்ந்த நிலையில் மரத்தின் ஒவ்வொரு கிளையாக விழுந்து வருகிறது. இங்கு, ஜல் ஜீவன் குடிநீர் திட்டம் பணி நடந்து வருகிறது.பாதசாரிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பலர் இந்த வழியாக சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் சென்று வருவதால், கீழே விழும் சூழ்நிலையில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே பட்டுப்போன மரத்தை, உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை