பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்குளித்தலை: குளித்தலை, தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்காலில் வாழை, வெற்றிலை பாதிப்புகளை தடுக்கும் வகையில், மே மாதம் வரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, நேற்று தென்கரை மற்றும் கட்டளை மேட்டு பாசன வாய்க்கால் விவசாயிகள், குளித்தலை பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்டம் அலுவலகம் முன், தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் சேட்டு தலைமை வகித்தார். மே மாதம் வரை பாசனத்திற்கு, பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.. கோபிகிருஷ்ணன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று முதல் மே மாதம் வரை, 10 நாட்களுக்கு ஒரு முறை, 350 கன அடி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாசனத்திற்கு, தண்ணீர் தேவைக்கு உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், விவசாயிகள் கலைந்து சென்றனர்.