உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானாஅமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானாஅமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானாஅமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்கரூர்:போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.கரூர்-கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவு உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தாராபுரம், பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இதனால், சின்னதாராபுரம் பிரிவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.பெரும்பாலும் போலீசார், சின்னதாராபுரம் பிரிவில் பணியில் இருப்பது இல்லை. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்த்தில், கோவை சாலையில், பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது.எனவே, சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.இதுகுறித்து, சின்னதாராபுரம் பிரிவு பகுதி மக்கள் கூறியதாவது: கோவை சாலை சின்னதாராபுரம் பிரிவு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், சின்னதாராபுரம் பிரிவு வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.அப்போது, கோவை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ