நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி
நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி கரூர்:கரூர் அருகே, வாங்கல் அக்ரஹாரத்தில் நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்படுகின்றனர்.கரூர்--நாமக்கல் மாவட்டம், மோகனுார் சாலையில் வாங்கல் அக்ரஹாரம் உள்ளது. அந்த பகுதியில் கோவில்கள், கால்நடை மருத்துவமனை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்கள் நாமக்கல், மோகனுார் மற்றும் திருச்சி மாவட்டம் காட்டு புத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பஸ் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்லும் மக்களும், பஸ் ஏறி செல்ல வேண்டும். ஆனால், வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பின், இரண்டு பகுதியிலும் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலில் மக்கள் நின்றபடி அவதிப்படுகின்றனர். எனவே, வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில், பயணி கள் நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.