உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிதிட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிதிட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிதிட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்புகரூர்:பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர வரும், 12 வரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசால், 'பிரதமரின் இன்டர்ஷிப் பயிற்சி' என்ற புதிய திட்டத்தில், 500 நிறுவனங்களில், 12 மாத கட்டணமில்லா பயிற்சியும், அதில் சேரும் இளைஞர்களுக்கு மாதம், 5,000 ரூபாய்- ஊக்கத்தொகை மற்றும் தற்செயலான செலவுகளுக்கு, 6,000 ரூபாய் ஒருமுறை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,, டிப்-ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு முடித்த, 21 முதல் 24 வயது வரை உள்ளவர்கள், pminternship.mca.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும், 12 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, 04324 299422, 82481 12815, 95669 92442 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை