உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கர்ப்பிணிகளுக்கு பல்வேறு திட்டங்கள்அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்

கர்ப்பிணிகளுக்கு பல்வேறு திட்டங்கள்அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்

கர்ப்பிணிகளுக்கு பல்வேறு திட்டங்கள்அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்கரூர்:'தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.கரூர் அருகே, தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். தமிழக அரசின் சீர்வரிசை பொருட்கள், 98 மகளிருக்கு, 1.18 கோடி மதிப்பீட்டில், 784 கிராம் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவியை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கி பேசியதாவது:கர்ப்ப காலம் என்பது, ஒவ்வொரு தாய்க்கும் மறுபிறவி என்றே குறிப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதை உணர்ந்த முதல்வர், கர்ப்பிணிகளுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் மட்டுமே, கர்ப்பமடைந்ததை பதிவு செய்தது முதல் கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலை, குழந்தை பிறந்து தடுப்பூசி செலுத்துவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து வரை கர்ப்பிணிகள் மீது தனி கவனத்துடன் கண்காணித்து மருத்துவ உதவி வழங்கி வருகிறது.மாவட்டத்தில், கடந்த, 2021 முதல், 2024 வரை பட்டம் மற்றும் பட்டயம் படித்த, 1,126 ஏழை பெண்களுக்கு தலா, 50,000 ரூபாய் வீதம், 56.30 கோடி ரூபாய் திருமண நிதியுதவியும், 9,008 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படித்த, 456 ஏழை பெண்களுக்கு தலா, 25,000 ரூபாய்- வீதம், 11.40 கோடி ரூபாய் திருமண நிதியுதவியும், 3,648 கிலோ கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சுவாதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி