மேலும் செய்திகள்
சிந்தலவாடி பஞ்சாயத்தில்சிமென்ட் சாலை படுமோசம்
08-Mar-2025
டிராக்டரில் காவிரி குடிநீர் வழங்கல்கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி பஞ்சாயத்து மக்களுக்கு, டிராக்டர்களில் கொண்டு சென்று, குடிநீர் வினியோகம் செய்யும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., மக்களுக்கு தொட்டியில் காவிரி குடிநீர் ஏற்றி வினியோகம் நடக்கிறது. தற்போது காவிரி ஆற்றில், நீர் வரத்து சரிந்துள்ளது. மேலும் போர்வெல் குடிநீர் கிணறுகளில் நீர் மட்டம் குறைவு ஆகியவற்றால், தொட்டியில் நீர் ஏற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களாக மக்களுக்கு காவிரி நீர் வினியோகம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், டிராக்டர்களில் காவிரி நீர் கொண்டு வந்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், தற்காலிகமாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
08-Mar-2025