உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலிகரூர்:கரூர் அருகே, பைக் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் பகுதியை சேர்ந்தவர் பூபதி, 49; இவர், நேற்று முன்தினம் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, கருப்பம்பாளையம் பிரிவு பகுதியில், பஜாஜ் பிளாட்டினம் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் புனவாசிப்பட்டியை சேர்ந்த சுரேஷ், 30, என்பவர் ஓட்டி சென்ற ஈச்சர் வேன், பூபதி ஓட்டிய பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பூபதி தலையில் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து, பூபதி மனைவி தமிழ்செல்வி, 35, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார், ஈச்சர் வேன் டிரைவர் சுரேஷ் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை