உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊழல் நிறைந்த அரசாகதி.மு.க., உள்ளது;பா.ஜ., மாநில செயலர்

ஊழல் நிறைந்த அரசாகதி.மு.க., உள்ளது;பா.ஜ., மாநில செயலர்

ஊழல் நிறைந்த அரசாகதி.மு.க., உள்ளது;பா.ஜ., மாநில செயலர்கரூர்:''ஊழல் நிறைந்த அரசாக, தி.மு.க., உள்ளது,'' என, பா.ஜ., மாநில செயலர் மலர்க்கொடி தெரிவித்தார்.கரூரில் பா.ஜ., அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். பின், மாநில செயலர் மலர்க்கொடி, நிருபர்களிடம் கூறியதாவது:டெல்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில், மதுபானத்தில் ஊழல் நடந்திருக்கிறது. அதை விட தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோடிக்கு மேல், டாஸ்மாக் ஊழல் நடந்திருக்கிறது என அமலாக்கத் துறையால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஊழல் நிறைந்த அரசாக தி.மு.க., செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதை வெளியே கொண்டு வர வேண்டும். யார் நம்மை கண்டுபிடிக்க போகிறார்கள்; யார் நம்மை கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது அரசு. ஆனால், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டுவார் என்பதை மறந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை