வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆளும் பல்லாக்கு உற்சவம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆளும் பல்லாக்கு உற்சவம்கரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவையொட்டி, நேற்று இரவு ஆளும் பல்லாக்கு உற்சவம் நடந்தது.கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கட ரமண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபி ேஷகம் ஆகியவை நடந்து வருகிறது.கடந்த, 10ல் திருக்கல்யாண உற்வசம், 12ல் தேர்த்திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 17ல் வெள்ளி கருட சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு ஸ்ரீதேவி, பூதேவி உடனான உற்சவர் பெருமாள் ஆளும் பல்லாக்கில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று ஊஞ்சல் உற்சவம், நாளை புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகளுடன், மாசிமக தெப்பத் திருவிழா நிறைவு பெறுகிறது.