உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்திதண்டோரா அடித்து பா.ஜ.,போராட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்திதண்டோரா அடித்து பா.ஜ.,போராட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்திதண்டோரா அடித்து பா.ஜ.,போராட்டம்குளித்தலை:குளித்தலை அடுத்த, நெய்தலுார் காலனியில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜாபிரதீப் தலைமையில், தண்டோரா போட்டு முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்ட சென்ற பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். இதில், 17 ஆண்கள், இரண்டு பெண்கள் அடங்குவர்.இதேபோல் இனுங்கூர் டாஸ்மாக் கடை முன், ஒன்றிய தலைவர் ரஞ்சித் தலைமையில், 12 ஆண்கள், நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கருப்பத்துார் பஞ்., தாளியாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் தலைமையில், கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்க முயற்சி செய்தனர். லாலாபேட்டை போலீசார் தடுத்து, அவர்களை கைது செய்தனர். இதில் 20 ஆண்கள், 7 பெண்கள் அடங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
மார் 22, 2025 15:57

தமிழக அரசின் சாராய கடைகளில் திராவிட மாடல் மொதல்வர் ஸ்டாலின் படம் வைக்காமல் சாராயத்தை அறிமுகப்படுத்திய திமுகவின் முன்னாள் தலைவரின் படத்தை வைக்கலாமா ?


Ram Moorthy
மார் 22, 2025 02:22

அந்த விஷ ஜந்துக்களுக்கு பதிலாக இவனே மக்களை கடித்து குதறி விடுவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை