உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்கரூர்:வெள்ளியணை அருகே, விவசாயி தோட்டத்தில் இருந்து, செம்மறி ஆடுகளை திருடி சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை பாகநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி, 48, விவசாயி. இவர் தோட்டத்தில், பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, நல்லுசாமி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை, பட்டிக்கு சென்ற போது, 10 செம்மறி ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து, நல்லுசாமி போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை