மேலும் செய்திகள்
குளித்தலை அருகே மணல்கடத்திய வாகனங்கள் பறிமுதல்
28-Mar-2025
கடவூர் பகுதியில்அனுமதியின்றி மணல், கிராவல் மண் கடத்தல்குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் பகுதியில் அரசு அனுமதியின்றி குளம், ஏரியில் இருந்து மணல், கிராவல் மண் கடத்தல் நடந்து வருகிறது.கடவூர் இடையப்பட்டி மற்றும் சுருமான்பட்டி பகுதி யில், அரசு அனுமதியில்லாமல் வாரி, காட்டாறு மற்றும் பட்டா நிலங்களில் மண், மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் குறித்து வருவாய் துறையினர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வாரி மற்றும் பட்டா நிலத்தில் இருந்து இயந்திரம் மூலம் மணல் கடத்தி, குவியலாக வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கடவூர் தாசில்தார் சவுந்திரவல்லி கூறுகையில்,'சம்பவ இடத்தை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
28-Mar-2025