உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரத்து குறைவால் ஜெட் வேகத்தில் கொய்யா விலை

வரத்து குறைவால் ஜெட் வேகத்தில் கொய்யா விலை

வரத்து குறைவால் ஜெட் வேகத்தில் கொய்யா விலைகரூர்:வரத்து குறைவால், சிவப்பு ரக கொய்யா பழம் விலை உயர்ந்துள்ளது.தேனி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் கொய்யா பழம் சாகுபடி நடக்கிறது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை, கொய்யா பழத்துக்கு சீசன் இருக்கும். அப்போது, வெள்ளை ரக, கொய்யா பழம் விற்பனைக்கு வரும். தற்போது, வெள்ளை ரக கொய்யா சீசன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், கோடை வெயில் காரணமாக செடிகளில் பூக்கள் கருகி விடுவதால், குறைந்தளவே சிவப்பு கொய்யா பழம் தேனி மாவட்டத்தில் இருந்து, கரூருக்கு விற்பனைக்கு வருகிறது.கடந்த மாதம் ஒரு கிலோ, 40 ரூபாய் வரை விற்ற சிவப்பு நிற கொய்யா பழம் வரத்து குறைவால், நேற்று 50 முதல், 60 ரூபாய் வரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது.இளம் பெண் குழந்தையுடன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை