மேலும் செய்திகள்
நீர்மோர் பந்தல்எம்.பி., திறப்பு
01-Apr-2025
கரூரில் அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்புகரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கோடை காலத்தையொட்டி நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.கோடை காலத்தையொட்டி, பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று கரூர் மினி பஸ் ஸ்டாண்ட், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் நேற்று நீர்மோர் பந்தலை, மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.பிறகு, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், துணை செயலர் ஆலம் தங்கராஜ், ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார், பகுதி செயலர் சக்திவேல் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
01-Apr-2025