உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கலெக்டர் கார் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கரூர் கலெக்டர் கார் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கரூர், கரூர் கலெக்டரின் கார் டிரைவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.திருச்சி ஏர்போர்ட் காவேரி நகரை சேர்ந்தவர் ஹக்கீம், 43; இவர், கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி, கரூர் கலெக்டரின் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஹக்கீம் வீட்டில் இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, வீட்டில் இருந்த உறவினர்கள் ஹக்கீமை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி