உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் கிராம சாலை திட்டத்தில்அரவக்குறிச்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

முதல்வர் கிராம சாலை திட்டத்தில்அரவக்குறிச்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

முதல்வர் கிராம சாலை திட்டத்தில்அரவக்குறிச்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடுஅரவக்குறிச்சி, :''அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு, முதல்வர் கிராம சாலை திட்டத்தில், 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி, மலைக்கோவிலுார், சவுந்திராபுரம், இனுங்கனுார், குறும்பப்பட்டி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசியதாவது:பொதுமக்கள் தங்கள் சேவைகளை நிறைவேற்றி கொள்ள அரசை அணுக வேண்டும் என்றால், தாலுகா, ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம் என நீங்கள் இரண்டு மூன்று முறை பயணித்து, அலுவலர்களை சந்தித்து மனு அளிக்க வேண்டும். அப்போது, கோரிக்கை மனுக்களுடன் இணைக்க வேண்டிய, பல்வேறு சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கிறதா என தெரியாது. அதனால் உங்களுடைய கால விரயத்தை போக்கவும், உங்களது பயண செலவை தவிர்க்கவும் முகாம் நடக்கிறது.முகாம்களில் தரும் மனுக்களை பெற்று, அதை கணினியில் பதிவு செய்து, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. பெண்கள் அதிகளவில் பயன்படும் வகையில், திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும், 1,730 விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற்று பயன் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் மட்டும், முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில், 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. மேலும், 30 ஆண்டு காலத்திற்கு மேல் பராமரிப்பு இல்லாத காலனி வீடுகளுக்கு, சிறப்பு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), டி.ஆர்.ஓ., கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை