உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உடல் நலக்குறைவால் இறந்த போலீஸ்காரர்குடும்பத்துக்கு ரூ.28.34 லட்சம் நிதி உதவி

உடல் நலக்குறைவால் இறந்த போலீஸ்காரர்குடும்பத்துக்கு ரூ.28.34 லட்சம் நிதி உதவி

கரூர்:கரூரில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு, சக போலீசார் ஒன்றிணைந்து, 28.34 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணையில் தலைமை காவலராக பிரகாஷ் பணியாற்றி வந்தார்.கடந்த மே 30 ல் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இறந்த பிரகாஷ்க்கு மனைவி முத்துலெட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அவரது குடும்பத்திற்கு, போலீஸ் துறை நண்-பர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, 2003ல் பணியில் இணைந்த போலீசார் சார்பில், உதவும் கரங்கள் என்ற வாட்ஸ் ஆப் குழு உரு-வாக்கப்பட்டது. அதில், தங்களாலான உதவி-களை செய்ய வேண்டும் என வேண்டு கோள் விடுக்கப்பட்டது. அதன்படி, 5,668 போலீசார் நிதி உதவி அளித்தனர். அதில், 28 லட்சத்து, 34 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது.அந்த தொகை பிரகாஷ் மனைவி, இரண்டு குழந்தைகள் பெயரில் வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டு, அதற்கான ஆவணத்தை அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி