உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு3,343 மாணவ, மாணவியர் பங்கேற்பு

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு3,343 மாணவ, மாணவியர் பங்கேற்பு

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு3,343 மாணவ, மாணவியர் பங்கேற்புகரூர்:தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைக்கான தேர்வை, 3,343 மாணவ, மாணவியர் எழுதினர்.மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மூலம் அரசு, அரசு உதவி பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் உதவித்தொகை பெற தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் உள்பட நாடு முழுவதும், 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு, 9 முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.இதன்படி, கரூர் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு நேற்று நடந்தது. கரூர், தான்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய வட்டாரங்களில், 13 மையங்களில் தேர்வு நடந்தது. 3,434 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 3,343 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 91 பேர் எழுதவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை