உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, தனியார் கல்லுாரி பஸ் கவிழ்ந்த விபத்தில், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.அரவக்குறிச்சி அருகே, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று காலை, 38 மாணவ, மாணவியரை அழைத்துக்கொண்டு கல்லுாரி பஸ் சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரன் மகன் முருகேஷ், 55, என்பவர் பஸ்சை ஓட்டினார். அரவக்குறிச்சி அருகே, சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவர் முருகேஷ், 55, மாணவி தர்ஷினி, 19, தனியா, 18, கனகதுர்கா, 18, மதுமிதா, 18, சண்முகப்பிரியா, 19, குங்கும ப்ரீத்தி, 17, ஆகிய ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ