உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை விதிகளை பின்பற்றாததால் 70 சதவீத விபத்துகள் நடக்கிறது: எஸ்.பி.,

சாலை விதிகளை பின்பற்றாததால் 70 சதவீத விபத்துகள் நடக்கிறது: எஸ்.பி.,

சாலை விதிகளை பின்பற்றாததால் 70 சதவீத விபத்துகள் நடக்கிறது: எஸ்.பி.,கரூர் :'' சாலை விதிகளை பின்பற்றாமல், செல்வதால்தான், 70 சதவீத விபத்துகள் நடக்கிறது,'' என, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.கரூர் அரசு கலைக்கல்லுாரியில், பசுபதிபாளையம் போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்த, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பேசியதாவது:நாட்டில், அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விபத்து மூலம் உயிரிழப்புகள், கொடுங்காயம், உடல் உறுப்புகளை இழப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. சாலை விதிகளை பின்பற்றாமல், வாகனங்களில் செல்லும் போதுதான், 70 சதவீத விபத்து நடக்கிறது. சாலை விதிகளை பின்பற்றுதல், டூவீலரில் செல்லும் போது கட்டாயம் ெஹல்மெட் அணிதல், மது போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் ஆகியவை முக்கியமானவை. அதன் மூலம், விபத்துக்களை தவிர்க்கமுடியும்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவது, விபத்துகளை தவிர்ப்பது மட்டுமின்றி, உயிரிழப்புகளை தடுப்பதும் அவசியம். எனவே மாணவ, மாணவியர், பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, அட்டைகளை ஏந்தி சென்றனர். அரசு கலைக்கல்லுாரியில் தொடங்கிய பேரணி, தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப், சுங்ககேட் வழியாக மீண்டும், கல்லுாரியை அடைந்தது.பேரணி தொடக்க விழாவில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், கல்லுாரி முதல்வர் சுதா, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ