மாவட்ட அளவிலான இறகு பந்து 80க்கும் மேற்பட்ட அணி பங்கேற்பு
மாவட்ட அளவிலான இறகு பந்து80க்கும் மேற்பட்ட அணி பங்கேற்புஅரவக்குறிச்சி, டிச. 26-இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இறகு பந்து போட்டியில், 80க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில், கரூர் மாவட்டத்தில் இருந்து, 80க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. குளித்தலை அணியை சேர்ந்த ஹரி, நவீன் ஆகியோர் முதலிடம், பள்ளப்பட்டி அணியை சேர்ந்த தன்வீர், சலீம் இரண்டாவது இடம், கரூர் அணியை சேர்ந்த ஹரி, விக்னேஷ் மூன்றாவது இடம் பெற்றனர். மற்றொரு பிரிவில் கரூர் அணியை சேர்ந்த ஆனந்த், அஜய் முதலிடம், சசி, வினோத் இரண்டாம் இடம், பள்ளப்பட்டி அணியை சேர்ந்த ரஷீத், துக்பைல் ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும்