உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் கால்நடை ஆம்புலன்ஸ்

நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் கால்நடை ஆம்புலன்ஸ்

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன' என, கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் மண்டல மேலாளர் அறிவுக்-கரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தொலைதுார கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கால்ந-டைகளை, நகர்ப்புறங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வருவது சிரமம். இதற்காக தமிழகம் முழுவதும் கால்-நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு ஏற்ப-டுத்தியுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண், '1962'ஐ அழைத்தால் இந்த அவசர கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நேரடியாக கால்நடைகள் வசிப்பிடத்திற்கு வரும்.நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டகலுார்கேட், களங்காணி, ஆர்.புதுப்பட்டி, சேந்தமங்கலம், அனியாபுரம், மல்லசமுத்திரம் மாணிக்கம்பாளையம், பல்லக்காபாளையம் போன்ற பகுதிகளில் தற்போது முதல் கட்டமாக, 8 கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், டிரைவர் என, மொத்தம், 3 பேர் காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை தயார் நிலையில் பணியில் இருப்பர்.அவசர சிகிச்சை தேவைப்பட்டாலும், தொடர் நோய் ஏற்பட்டி-ருப்பினும் கால்நடை வளர்ப்பு உரிமையாளர்கள் இருப்பிடத்-திற்கே சென்று செயற்கை கருவூட்டல், மகப்பேறு, சிறிய அறுவை சிகிச்சைகள் அளிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் தற்-போது இந்த ஆம்புலன்ஸ் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்-சேவை முற்றிலும் இலவசம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை