உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வழியாக வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கம்

கரூர் வழியாக வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கம்

கரூர்: கரூர் வழியாக, மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு, வந்தே பாரத் ரயில் வரும் செப்., 2 முதல் இயக்கப்படுகிறது.இதுகுறித்து, தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரையில் இருந்து இன்று முதல், கர்நாடகா மாநிலம், பெங்களூ-ருவுக்கு வந்தே பாரத் ரயில் (எண்-20671) இயக்கப்படுகிறது. அதன்படி வரும் செப்., 2 முதல் மதுரையில் இருந்து அதி-காலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், திண்டுக்கல்-லுக்கு காலை, 5:59 மணி, திருச்சி, 6:50, கரூர், 8:08, நாமக்கல், 8:32, சேலம், 9:15, கிருஷ்ணராஜபுரம் மதியம், 12:50, பெங்களூரு-வுக்கு, 1:00 மணிக்கும் செல்கிறது.அதேபோல் பெங்களூருவில் (எண்-20672) இருந்து மதியம், 2:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், கிருஷ்ணராஜபுரத்துக்கு, 2:55 மணி, சேலத்துக்கு, 4:50, நாமக்கல்லுக்கு, 5:38, கரூர், 5:58, திருச்சி இரவு, 7:20, திண்டுக்கல், 8:28, மதுரைக்கு, 9:45 மணிக்கு செல்கிறது. செவ்வாய் கிழமை தவிர, மற்ற ஆறு நாட்களில் மது-ரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இன்று தொடக்க விழாமதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க தொடக்க விழா இன்று மதியம், 12:30 மணிக்கு, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நடக்கிறது. அதை வீடியோ கான்பரன்ஸ் மூலம், பிர-தமர் மோடி தொடங்கி வைக்கிறார். திண்டுக்கல்லுக்கு மதியம், 1:14 மணி, திருச்சி, 2:05, கரூர், 3:23, நாமக்கல், 3:47, சேலம், 4:30, கிருஷ்ணராஜபுரம் இரவு, 9:00, பெங்களூருவுக்கு, 9:30 மணிக்கும் வந்தே பாரத் ரயில் சென்று சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !