உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரம்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஜக்கிய விவசாயிகள் முண்ணனி சார்பில், நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாயனுாரில் நடந்தது.மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மத்திய அரசு, விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு, முறையான விலை தராமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக விலை நிர்ணயம் செய்கிறது. விவசாயிகளுக்கு எந்த விதமான சலுகைகளும் தருவதில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்து தர மறுக்கிறது என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ