பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர், டிச. 25-கரூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கரை விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், அமித் ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து, டிஸ்மிஸ் செய்யக் கோரியும் கோஷம் எழுப்பினர். மாநில துணைத்தலைவர் இளமாறன் சேகர், செயலாளர்கள் மலையப்பன், திருமாறன், மாவட்ட துணைத்தலைவர் தங்கம், பொதுச்செயலாளர் தஸ்வீன், செயலாளர் அன்பழகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.