பெண்ணுக்கு மிரட்டல்வாலிபர் மீது வழக்கு
பெண்ணுக்கு மிரட்டல்வாலிபர் மீது வழக்குகுளித்தலை,: குளித்தலை அடுத்த கருப்பத்துார் பஞ்., வரகூரை சேர்ந்த முத்துசெல்வம் மனைவி அம்பிகா, 37; இவரிடம், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு என்பவர், போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதை பாபுவின் தந்தையிடம் சொல்லி கண்டித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அம்பிகாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.பாதிக்கப்பட்ட அம்பிகா, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், பாபு மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.