உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நீங்கியது

கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நீங்கியது

கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நீங்கியதுகிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், நெல் அறுவடை பணிகள் துவங்கியதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நீங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், வயலுார், சிந்தலவாடி, பிள்ளபாளையம், மாயனுார், மணவாசி ஆகிய பஞ்சாயத்துகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வயல்களில், நெல் அறுவடை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதனால், கால்நடைகளுக்கு வைக்கோல் ஏராளமாக கிடைத்து வருவதால், தீவன தட்டுப்பாடு நீங்கியுள்ளது. வைக்கோல் கட்டு ஒன்று, 200 ரூபாய்க்கு விவசாயிகள் விற்று வருகின்றனர். தொடர்ந்து, நெல் அறுவடை பணி நடக்கும் என்பதால், இந்தாண்டு கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை இருக்காது என, விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை