உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈசநத்தம் சாலையில் விளக்குகள் தேவை

ஈசநத்தம் சாலையில் விளக்குகள் தேவை

ஈசநத்தம் சாலையில் விளக்குகள் தேவைஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே இந்த சாலையில், மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிகளவு காடுகள் நிறைந்துள்ளன. இதனால் இந்த சாலையில், ஆங்காங்கே குறிப்பிட்ட துாரம் வரை மிகக் குறைவான அளவிலேயே, மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில், கூடுதலாக மின் விளக்குகளை ஏற்படுத்தித் தர, மாவட்ட நிர்வாகத்துக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, சாலையை பார்வையிட்டு மின் விளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி