பள்ளப்பட்டி நகராட்சிக்குபுதிய கட்டடம் திறப்பு
பள்ளப்பட்டி நகராட்சிக்குபுதிய கட்டடம் திறப்புஅரவக்குறிச்சி:பள்ளப்பட்டி நகராட்சி க்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டது.அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் நகராட்சி கட்டடம், பல ஆண்டுகளானதால் புதிய கட்டடம் கட்டுவதற்காக, நகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்தது.இந்நிலையில் பணிகள் முடிவுற்று, நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி வாயிலாக, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு புதிய நகராட்சி கட்டடத்தை திறந்து வைத்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ புதிய நகராட்சி கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், நகராட்சி ஆணையர் ஆனந்தி, பள்ளப்பட்டி நகர தி.மு.க., செயலாளர் வாசிம் ராஜா, கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.