புகழூர் நகராட்சிசாதாரண கூட்டம்
புகழூர் நகராட்சிசாதாரண கூட்டம்கரூர்:புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் குணசேகரன் தலைமையில், கூட்ட அரங்கில் நடந்தது.அதில், புகழூர் அறிவுசார் மையத்துக்கு ஜெனரேட்டர் உள்ளிட்ட, பல்வேறு பொருட்கள் வாங்க, 40 லட்ச ரூபாய் ஒதுக்குதல், 18.80 லட்சம் ரூபாய் மதிப்பில் செப்டிக் டேங்க் கட்டுதல், காந்தி திருமண மண்டபம், 40 லட்ச ரூபாய் செலவில் பராமரிப்பு செய்தல், உரக்கிடங்கு வளாகத்தில் பராமரிப்பு செய்ய, ஒன்பது லட்ச ரூபாய் ஒதுக்குதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்தல் உள்பட, 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் ேஹமலதா, பொறியாளர் மலர்க்கொடி, ஆய்வாளர் ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.