உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாழை சாகுபடி பணியில் விவசாயிகள்

வாழை சாகுபடி பணியில் விவசாயிகள்

வாழை சாகுபடி பணியில் விவசாயிகள்கிருஷ்ணராயபுரம்:வல்லம் பகுதியில், வாய்க்கால் தண்ணீர் பாசன முறையில், வாழை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்த நிலங்களில் மாற்று சாகுபடியாக, வாழை சாகுபடி செய்யும் வகையில் டிராக்டர் கொண்டு உழவு பணிகள் செய்யப்பட்டது. தற்போது நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய வாழை கன்றுகளை நடவு செய்யும் பணிகளில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாழைக்கு தேவையான தண்ணீர், மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த பகுதியில் கற்பூரவள்ளி ரக வாழை சாகுபடி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ