உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுங்ககேட் நிழற்கூடத்தை சீரமைக்க கலெக்டர்அலுவலகத்தில் மனு

சுங்ககேட் நிழற்கூடத்தை சீரமைக்க கலெக்டர்அலுவலகத்தில் மனு

கரூர்:கரூர் சுங்ககேட் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, வி.சி.க., தொழிற்சங்க பேரவை மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் - திண்டுக்கல் சாலை சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் உள்ளது. இங்கிருந்து கலெக்டர் அலுவலகம், வெள்ளியணை, குஜிலியம்பாறை, திண்டுக்கல் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் ஏறி செல்கின்றனர். இங்குள்ள, நிழற்கூடத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து விட்டதால், அவை அகற்றப்பட்டு விட்டன. இதனால், பயணிகள் உட்கார முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, நிழற்கூடத்தை பயணிகள் நாடி செல்கின்றனர். முதியவர்கள் இருக்கை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இருக்கை வசதியின்றி உள்ள நிழற்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை