காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி மாயம்
கரூர்:கரூர் அருகே, காகித ஆலையின் ஒப்பந்த தொழிலாளியை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், நாணப்பரப்பு சேங்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத், 23; புகழூர் காகித ஆலையில் (டி.என்.பி.எல்., நிறுவனம்) ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காகித ஆலைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற, கோபிநாத் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கோபிநாத் மனைவி சந்தியா, 21, போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.