உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி

திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி

திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சிகரூர்:கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில், இயல் இசை நாடக மன்றம் சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசு, கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், கரூரில் மங்கள இசையை துரைசாமி குழுவினரும், தப்பாட்ட கலையை சுதாகர் குழுவினரும், கோலாட்டத்தை சின்னதுரை குழுவினரும், சரித்திர புராண நாடகத்தை பழனிசாமி குழுவினரும் மற்றும் நையாண்டி மேளத்தை சண்முகம் குழுவினரும் நடத்தினர்.ஒவ்வொரு கலைக்குழுவிலும் உள்ளூரை சேர்ந்த தலா, 10 கலைஞர்கள் வீதம் மொத்தம், 50 கலைஞர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை