உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி

கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி

கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணிகரூர்:நெரூர் பார்க் நகர் மற்றும் கிருஷ்ணன் கோவில் தெருவில், கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகால் பணியை, விரைவில் முடிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நெரூர் வடபாகம் பஞ்சாயத்துக்குட்பட்ட, நெரூர் பார்க் நகர் மற்றும் கிருஷ்ணன் கோவில் தெருவில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வடிகால் கட்டப்படவில்லை. மழை காலங்களில், தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் நடந்தும் மற்றும் வாகனங்களில் செல்லவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, 2023ம் ஆண்டு மழை நீர் வடிகால் கட்டுமான பணி தொடங்கப்பட்டது.இப்பணி முழுமை பெறாமல், பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது தண்ணீர் வடிய வழியின்றி வடிகாலில் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயை பரப்புவதுடன், துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பாதியில் நிற்கும் மழைநீர் வடிகால் பணியை, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை