உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போக்குவரத்து போலீசாருக்கு சோலார் கேப் வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்கு சோலார் கேப் வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்கு சோலார் கேப் வழங்கல்கரூர்:கரூரில், போக்குவரத்து போலீசாருக்கு கேப், கருப்பு கண்ணாடி மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.கரூரில், கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி எடுப்பதால், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், பல்வேறு வகையான குளிர் பானங்களை குடித்து வருகின்றனர். கரூர், கோவை சாலையில் மனோகரா கார்னர், 80 அடி சாலை, சேலம் பைபாஸ் ரவுண்டானா, தின்னப்பா சாலை ரவுண்டானா, சர்ச் கார்னர் உள்பட, 15 இடங்களில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதன்படி, பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானவில், போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். போலீசாருக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு, சோலார் கேப், கருப்பு கண்ணாடி ஆகியவை வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், கரூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சாஹிரா பானு, நந்தகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை