உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெரூர் பிரிவில் ரவுண்டானாஅமைக்கும் பணி தொடக்கம்

நெரூர் பிரிவில் ரவுண்டானாஅமைக்கும் பணி தொடக்கம்

நெரூர் பிரிவில் ரவுண்டானாஅமைக்கும் பணி தொடக்கம்கரூர்:கரூர் அருகே, விபத்து மற்றும் நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.கரூர் - வாங்கல் சாலை, நெரூர் பிரிவு வழியாக மின்னாம்பள்ளி, நெரூர், ஓத்தக்கடை, மறவாப்பாளையம், அரங்கநாதன் பேட்டை, திருமுக்கூடலுார் உள்ளிட்ட, 30க்கும் மேற் பட்ட கிராம பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, விசேஷ நாட்களில் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளி மாவட் டங்களை சேர்ந்த பக்தர்கள், வந்து செல்கின்றனர். அப்போது, வாங்கல் சாலை நெரூர் பிரிவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.இதையடுத்து, நெரூரில் பிரிவில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கின. தற்போது, நெரூர் பிரிவில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில், ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால், வாங்கல் சாலை நெரூர் பிரிவு வழியாக, வாகனங்கள் நெரிசலில் சிக்காமல், எளிதாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை