பங்குனி உத்திர திருவிழாஉற்சவர் திருவீதி உலா
பங்குனி உத்திர திருவிழாஉற்சவர் திருவீதி உலாகரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று மூன்றாவது நாளாக சுவாமி திருவீதி உலா நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3 ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. அதைதொடர்ந்து, நாள்தோறும் உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது.நேற்று மாலை, மூன்றாவது நாளையொட்டி உற்சவர் சந்திர சேகர், பூத வாகனத்திலும், ஆனந்த வள்ளி பூதகி வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.