உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கள்ளப்பள்ளியில் சாக்கடை கால்வாய் துாய்மை பணி

கள்ளப்பள்ளியில் சாக்கடை கால்வாய் துாய்மை பணி

கள்ளப்பள்ளியில் சாக்கடை கால்வாய் துாய்மை பணிகிருஷ்ணராயபுரம்:கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில், கழிவுநீர் கால்வாய் பகுதியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொடிக்கால் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் வழியாக செல்கிறது. கால்வாய் சுத்தம் செய்யாமல் விடப்பட்டதால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நேற்று காலை துாய்மை பணியாளர்கள் கொண்டு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சாக்கடையில் தேங்கி இருந்த கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ