மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
06-Apr-2025
கரூர் பா.ஜ., அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம்கரூர்:கரூர், பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், கரூர் சட்டசபை தொகுதியில், தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். கட்சியின் வரலாறு, அமைப்பு ரீதியான பணிகள், தியாகம் செய்த தலைவர்கள், கட்சி ஆட்சிக்கு வரும் முன்பும் வந்த பிறகும் நமது நாடு எப்படி இருந்தது என்றும், வளர்ந்த பாரதம் 2047 என்ற குறிக்கோளை அடைய செய்து வரும் கட்டமைப்புகள் பற்றியும் விளக்கினர். ஒவ்வொரு கிளையிலும் வாரந்தோறும் தவறாமல் கூட்டம் நடத்த வேண்டும். வரும், 19ல் சேலம் மாநாட்டில் கரூர் மாவட்டம் சார்பாக, 10,000 பேர் கலந்து கொள்ள வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் குப்புராவ், முன்னாள் மேற்கு மாநகர் தலைவர் முருகேசன், கரூர் மேற்கு மாநகர் தலைவர் பவானி துரைபாண்டியன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Apr-2025