உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவு

டேங்கர் லாரி மோதிவடமாநில பெண் சாவுகரூர்:வாங்கல் அருகே, டேங்கர் லாரி மோதியதில், நடந்து சென்ற வடமாநில பெண் உயிரிழந்தார்.மேற்கு வங்காளம் மாநிலம், பர்க்கானி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் முன்டா, 60; இவர், மனைவி சாரதி முன்டா, 54, என்பவருடன், கரூர் அருகே ஆத்துாரில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாரதி முன்டா, வாங்கல் அருகே வடுகப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் லாலாப்பேட்டையை சேர்ந்த முருகானந்தம், 43; என்பவர் ஓட்டி சென்ற டேங்கர் லாரி, சாரதி முன்டா மீது மோதியது.அதில், தலையில் படுகாயமடைந்த சாரதி முன்டா, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, சாரதி முன்டாவின் கணவர் சந்தோஷ் முன்டா கொடுத்த புகாரின் படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை