உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கத்தியை காட்டி மிரட்டிபணம் பறித்தவருக்கு வலை

கத்தியை காட்டி மிரட்டிபணம் பறித்தவருக்கு வலை

குளித்தலை:குளித்தலை அடுத்த, தேவர்மலை பஞ்., அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 54, விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலை 10:45 மணியளவில் பாளையம் மையிலம்பட்டி சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பால்மடைபட்டி பஸ் ஸ்டாப் அருகே, அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்பவர் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.பணம் இல்லை என கூறியதால், மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி வெள்ளைச்சாமி சட்டை பாக்கெட்டில் இருந்த, 500 ரூபாயை பறித்து கொண்டு, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என, மிரட்டி சென்றார்.வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ