உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவல் சண்டை நடத்தியமூவர் கைது; 3 பைக் பறிமுதல்

சேவல் சண்டை நடத்தியமூவர் கைது; 3 பைக் பறிமுதல்

சேவல் சண்டை நடத்தியமூவர் கைது; 3 பைக் பறிமுதல்குளித்தலை:குளித்தலை அடுத்த கொசூர் பஞ்சாயத்து, குப்பாண்டியூரில், நேற்று முன்தினம் சேவல் சண்டை நடப்பதாக, தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியின் மற்றும் போலீசார், சம்பவ இடத்தை கண்காணித்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த குள்ளரங்கன்பட்டி விஜயகுமார், 35, தலையாரிபட்டி ராஜா, 65, திருச்சி மாவட்டம், இனாம் புலியூர் அடுத்த போசம்பட்டி மணியரசு, 30, ஆகிய மூவரை மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக் இரண்டு, 'ஸ்பிளண்டர் புரோ' பைக் ஒன்று என, மொத்தம், மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். எள் அறுவடையில்விவசாயிகள் தீவிரம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட வீரியபாளையம், லட்சுமணம்பட்டி, பழையஜெயங்கொண்டம், வயலுார், வடுகப்பட்டி, பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, மேட்டுப்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் எள் சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, கிணற்று பாசன நீரையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது எள் செடிகள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழைக்காலம் தொடங்குவதற்குள், கூலியாட்கள் மூலம் எள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு எள் சாகுபடியில் ஓரளவு வருமானம் கிடைக்கும் என, விவசாயிகள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி