2 போலீஸ் எஸ்.ஐ.,க்கு அண்ணாதுரை பதக்கம்
கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த, இரண்டு போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, அண்ணாதுரை பதக்கம் வழங்கப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை-யொட்டி, போலீசாருக்கு அண்ணாதுரை பதக்கம் வழங்குவது வழக்கம்.அதன்படி, கடந்தாண்டு மாநிலம் முழுவதும், 100 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில், பொருளாதார குற்-றத்தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும், எஸ்.ஐ., கதிர்வேல், கடந்த மார்ச், 31ல் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தீனதயாளன் ஆகிய, இரண்டு பேர், அண்ணாதுரை பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்-டனர்.அவர்களுக்கு, கடந்த, 22ல் சென்னையில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்-டினார். அவர்களுக்கு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.