உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கரூரில் தொடக்கம்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கரூரில் தொடக்கம்

கரூர்: கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளை-யாட்டு போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. போட்டியை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து, கூறியதா-வது: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில், 27 வகையான போட்-டிகளும், மண்டல அளவில், 53 வகையான போட்டிகளும் நடக்கிறது. 17,574 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மாவட்ட அளவிலான பரிசுத்தொகை முதலிடம், 3,000 ரூபாய், இரண்டாமிடம், 2,000 ரூபாய், மூன்றாமிடம், 1,000 ரூபாய் வழங்-கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கும் அணிகள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் கவிதா, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநக-ராட்சி துணை மேயர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை