உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூரில் மனைவி கொலை பீகாரில் கணவன் கைது

புகழூரில் மனைவி கொலை பீகாரில் கணவன் கைது

கரூர்: கரூர் அருகே, மனைவியை கொலை செய்து விட்டு, பீகார் மாநி-லத்தில் பதுங்கியிருந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.பீகார் மாநிலம், தாராம்பூர் பகுதியை சேர்ந்தவர் புக்கர் மாஜி, 30. இவர் மனைவி சன்மதி தேவி, 28. இருவரும் கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள, தனியார் பால் பண்ணையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், மனைவி சன்மதி தேவிக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த புக்கர் மாஜி கடந்த ஜூலை, 4ல், சன்மதி தேவியை கொலை செய்து விட்டு, தப்பி விட்டார். இதுகு-றித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புக்கர் மாஜியை தேடி வந்தனர். அப்போது, சொந்த மாநிலமான பீகாரில் புக்கர் மாஜி, தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, வேலாயுதம்பாளையம் தனிப்படை போலீசார், பீகார் மாநிலம் தாராம்பூருக்கு சென்று, தலைமறைவாக இருந்த புக்கர் மாஜியை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்ப-டுத்தி, நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை