மேலும் செய்திகள்
மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
21-Aug-2024
குளித்தலை: குளித்தலை அருகே, குப்பமேட்டுப்பட்டி, மேலப்பட்டி, பெரியபனையூர் கிராமங்களில் உள்ள கோவில்களில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.குளித்தலை அடுத்த கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டியில், விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன், கருப்பண்ணசாமி, முனியப்ப சாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு, தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோவிலை புனரமைப்பு செய்து, கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று முன்தினம் காலை, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, யாக சாலையில் புனித நீர் அடங்கிய கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள், இரண்டு கால பூஜை செய்தனர். நேற்று காலை, 8:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி, தீபாராதனை செய்தனர். அதை தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல், தளிஞ்சி பஞ்., டி.மேலப்பட்டியில் அமைந்துள்ள பாம்பலம்மன் கோவில், நெய்தலுார் பஞ்., பெரியபனையூரில் அமைந்துள்ள பகவதி அம்மன், மாரியம்மன், சித்தி விநாயகர், முருகன், காளியம்மன், மாசி பெரியண்ணசாமி, பனையடி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
21-Aug-2024