உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பராமரிக்கப்பட்டதெரு விளக்குகள்

பராமரிக்கப்பட்டதெரு விளக்குகள்

கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து வார்டுகளான கோடங்கிப்பட்டி, வயலுார், சரவணபுரம், பாம்பன்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, சில தெரு விளக்குகளில் பழுது ஏற்பட்டது. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கியது. வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டனர்.இந்நிலையில், பழுதடைந்த தெரு விளக்குகளை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றி விட்டு, புதிய தெரு விளக்குகளை அமைத்து கொடுத்துள்ளது.லாலாப்பேட்டையில் நாய் தொல்லையால் மக்கள் அச்சம்கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை சுற்று பகுதியில், சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை, கருப்பத்துார் சாலை ஆகிய இடங்களில் கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. கழிவுகளை சாப்பிட வரும் தெரு நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு வெறி பிடித்து திரிகின்றன. மேலும் சாலை வழியாக செல்லும் மக்களை, துரத்தி கடித்து வருகிறது. நாய்க்கடிக்கு ஆளாவோர் கள்ளப்பள்ளி, குளித்தலை அரசு மருத்துவமனை சென்று, சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். ஆகையால் கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில் சுற்றித்திரிந்து வரும் நாய்களை பிடிக்க யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி