உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துவரை செடிகளில்பூக்கள் பிடிப்பு

துவரை செடிகளில்பூக்கள் பிடிப்பு

துவரை செடிகளில்பூக்கள் பிடிப்புகிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், சின்ன சேங்கல், முனையனுார், கீழ முனையனுார், பஞ்சப்பட்டி, வயலுார், புனவாசிப்பட்டி, மத்திப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்து வருகின்றனர். துவரை செடிகளுக்கு மழை நீர் கிடைத்தது. இந்த மழை நீரால் செடிகள் பசுமையாக வளர்ந்தது. தற்போது வளர்ந்த துவரை செடிகளில், பூக்கள் அதிகமாக பிடித்து வருகிறது. பூக்கள் பிடிப்பு துவங்கியுள்ளதால், செடிகளில் காய்கள் பிடிக்கும். மேலும் இந்தாண்டு ஓரளவு மகசூல் பாதிப்பு இன்றி இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ